×

மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமீன் வழக்கு தள்ளுபடி

 

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த சத்தியேந்திர ஜெயின், அதேப்போன்று டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.எல்.சி கவிதா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் ஜாமீன் கேட்டு கவிதா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்துக் கொண்டு கடந்த மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவிஜா நேற்று வழங்கிய தீர்ப்பில்,‘‘ டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்போது கவிதாவுக்கு ஜாமீன் உட்பட எந்தவித இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது. எனவே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடடிக்கைக்கு எதிராக கவிதா தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

The post மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமீன் வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Kavita ,NEW DELHI ,CBI ,Delhi ,Kavita Bail ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...